Ajith in stylish look; Photo goes viral

Advertisment

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'வலிமை'. எச்.வினோத் இயக்கியிருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக 20 கிலோவிற்கு மேல் உடல் எடையை குறைத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை தீபாவளி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் 'ஏகே 61' பட கெட்டப்பில் வெள்ளை நிற ஆடையில், கூலிங் கிளாஸூடன் செம ஸ்டைலாக நிற்கிறார். 'ஏகே 61' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத் விமானநிலையத்தில் இருந்து சென்னை திரும்பும் போது இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.