Celebrity to reunite with Ajith after 20 years

Advertisment

வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக 20 கிலோவிற்கு மேல் உடல் எடையை குறைத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் 35 நாள் படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் 'ஏகே 61' படத்தில் மகாநதி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாநதி சங்கர், அஜித் நடிப்பில் 2001-ஆம் ஆண்டு வெளியான 'தீனா' படத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு 20-வருடம் கழித்து அஜித்துடன் இணைந்து 'ஏகே 61' படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மே 25-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக சினிமா வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.