ADVERTISEMENT

"ஒரே நாளில் டபுள் அப்டேட்" - போனி கபூர் வெளியிட்ட புதிய அறிவிப்பு

06:47 PM May 06, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தமிழ் அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT