Udhayanidhi Stalin Nenjuku Needhi goes viral

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இப்படத்தைத் தமிழில்அருண்ராஜா காமராஜ் இயக்க,உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ஆர்டிக்கள் 15' படத்திற்கு சற்றும் விறுவிறுப்பு குறையாமல் ஆதிக்க சாதியினரால் பட்டியலின மக்களுக்கு ஏற்படும் கொடுமைகளை காட்டியுள்ள இப்படத்தின் ட்ரைலர்பலரின் கவனத்தை பெற்று வருகிறது. இந்த ட்ரைலரில் "எல்லோரும்சமம் என்றால் யாரு சார் ராஜா?, அவங்க குளிச்ச அழுக்காகாததண்ணி, நாங்க குடிச்சாஅழுக்காகும்?,அழுக்குக்கும், தீட்டுக்கும் வித்தியாசம்தெரியாது உனக்கு, நம்மள இங்க எரிக்கத்தான்விடுவாங்க, எரியா விடமாட்டாங்க, அவா சாக்கடைசார் அதுலஎதுக்கு நாம இறங்கணும்போன்ற வசனங்கள்பட்டியலினமக்களின் துயரத்தை அப்படியே காட்டியுள்ளது. அத்துடன் சாக்கடையில் இறங்கினால்தான் உண்மை கிடைக்கும்ன்னாஅதுலஇறங்குற முதல் ஆள் நானாகத்தான்இருப்பேன் என்று உதயநிதி பேசும் வசனம் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

மேலும் இந்த ட்ரைலர் 1.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.