cm stalin praised nenjuku needhi movie

Advertisment

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தமிழில்அருண்ராஜா காமராஜ் இயக்க,உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர்மற்றும் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நேற்று இரவு நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்ததமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் படம் நன்றாக இருந்தாக கூறிபாராட்டியுள்ளார். மேலும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.