ADVERTISEMENT

"தயவுசெய்து இதை ஷேர் செய்யாதீங்க!" - மாளவிகா மோகனன் வேண்டுகோள்!

11:01 AM Jan 12, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் நேற்று இணையத்தில் கசிந்தது. மேலும் சில சமூக ஊடகங்களிலும் இப்படக் காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. இது திரையுலகினரைப் பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இது குறித்து இப்பட நாயகி மாளவிகா மோகனன் ட்வீட் செய்துள்ளார். அதில்...


"மூன்று மணிநேரப் படம் தயாரிக்க சில மாதங்கள் அல்லது சில நேரங்களில் ஒரு வருடம் கூட ஆகும். ஒரு திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியையும், கடின உழைப்பையும் மதிக்க வேண்டும். தயவுசெய்து 'மாஸ்டர்' படத்திலிருந்து கசிந்த எந்த காட்சியையும் பகிர வேண்டாம். இப்படம் சரியாக 1 நாளில் உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளுக்கு வருகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT