இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டாலும் கரோனா காரணமாக படத்தைத் திட்டமிட்டபடி வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது தியேட்டர்கள் திறப்பதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளதால், படத்தைப் பொங்கலுக்குத் திரைக்குக் கொண்டவர தயாரிப்பு நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா, தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, நடிகர் விஜய் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து இருக்கும் புகைப்படத்தை 'மாஸ்டர்' படக்குழு வெளியிட்டுள்ளது.
ஆண்ட்ரியா பிறந்தநாளை முன்னிட்டு, மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் தயாராகி வரும், 'பிசாசு 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியானது குறிப்பிடத்தக்கது.
Here's wishing the stylish diva, the #Master of her arts, @andrea_jeremiah, a very happy birthday! ❤️#HappyBirthdayAndreaJeremiahpic.twitter.com/ZQ1hP8BEV5
— XB Film Creators (@XBFilmCreators) December 21, 2020