ADVERTISEMENT

"அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ" - கவனம் ஈர்க்கும் தனுஷ் பட பாடல்

12:07 PM Feb 19, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'மாறன்' படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரும் பத்திரிகையாளராக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலும், அப்பாடலுக்கு தனுஷ் ஆடிய நடனமும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது அடுத்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக் வரிகளில், அனுராக் குல்கார்னி பாடியுள்ள இப்பாடல் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இது வரை வெளியான அண்ணன் தங்கை சென்டிமென்ட் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்த நிலையில் தற்போது அந்த லிஸ்டில் இப்பாடலும் இணையும் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT