ADVERTISEMENT

தேசிய விருது பெற்ற இயக்குநருடன் கூட்டணி அமைத்த லைகா

11:08 AM Nov 10, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அதர்வா. கடைசியாக 'ட்ரிகர்' படத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனிடையே அதர்வா நடிப்பில் 'அட்ரஸ்', 'ஒத்தைக்கு ஒத்த' படங்கள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில், அதர்வா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி லைகா நிறுவனம் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கிறார். 'பட்டத்து அரசன்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து ராஜ்கிரணும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கையில் கிராமத்துப் பின்னணியிலான கதை போல் தெரிகிறது. ஏற்கனவே இதே கிராமத்துப் பின்னணியில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு சண்டிவீரன் படம் வெளியானது. இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதால் மீண்டும் இக்கூட்டணி அமைந்துள்ளது சற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தமிழில் பல படங்களைத் தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். அந்த வகையில் கமலின் 'இந்தியன்', ரஜினியின் 'லால் சலாம்', வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்', ராகவா லாரன்ஸின் 'சந்திரமுகி 2', மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 2' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில், தேசிய விருது பெற்ற இயக்குநர் சற்குணம் உடன் கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சற்குணம் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 'வாகை சூடவா', சிறந்த தமிழ் படம் என்ற பிரிவில் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT