fsfsf

1991-ஆம் ஆண்டு ராஜ்கிரண் தயாரிப்பில் கஸ்துரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் - மீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'என் ராசாவின் மனசிலே'. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.இத் திரைப்படத்தில்தான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை ராஜ்கிரண் அறிமுகப்படுத்தினார். நடிகர் ராஜ்கிரணின் சினிமா கரியரிலும், நல்ல சினிமா ரசிகர்களின் ரசனையிலும் நீங்கா இடம்பிடித்த படம் இது. 90களின் சிறந்த படங்களில் ஒன்றான இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரனின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுஇயக்க இருக்கிறார்.

Advertisment

alt="vdsaa" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="e442cbf4-3aae-4d76-8dca-4c4aab39cdc8" height="418" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside_8.jpg" width="697" />

Advertisment

இதுகுறித்து நடிகர் ராஜ்கிரன் கூறும்போது, "இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள். ‘என் ராசாவின் மனசிலே’இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார். அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்" என்றார்.