
லைகா தயாரிப்பில், இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண், அதர்வா முரளி மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் ‘ப்ரொடக்சஷன் 22’படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது. தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், படக்குழு கடுமையான உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பை மேற்கொள்கிறது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில்முடிக்க, படக்குழு முடிவுசெய்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம், முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகிறது. இப்படத்தில் ராஜ் கிரண், ராதிகா சரத்குமார், ஜேபி, ஆர்.கே. சுரேஷ், சிங்கம் புலி, கன்னட நடிகர் ரவி காலே, சத்ரு, பால சரவணன், ராஜ் அய்யப்பா, ஜி.எம். குமார் உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்துக்கு லோகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)