/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/268_6.jpg)
மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில்பொங்கலன்று வெளியான துணிவு படம் வெற்றிகரமாகத்திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் வசூல் குறித்த விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும் உலகம் முழுவதும் ரூ.220 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தைத்தொடர்ந்து அஜித்தின் 'ஏகே 62' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் அரவிந்த்சாமியும் சந்தானமும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும்கூறப்பட்டது.
ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் இயக்கும்'ஏகே 62' படம் தள்ளிப் போவதாகவும் அதாவது அஜித்தின் அடுத்த படமான 'ஏகே 63'-ஐவிக்னேஷ் சிவன் இயக்குவதாகஇருக்கும் எனவும் சமூக வலைத்தளத்தில் சொல்லப்படுகிறது. மேலும் 'ஏகே 62' படத்தை 'தடம்', 'கலகத் தலைவன்' உள்ளிட்ட சில படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குவதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில் திடீரென தள்ளிப்போகவுள்ளதாகச் சொல்லப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்தக் குழப்பங்களுக்கு அஜித் தரப்பு அல்லது படக்குழுவிளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)