ADVERTISEMENT

"மிகச் சிறப்பான படம்" - லிங்குசாமி பாராட்டு

05:14 PM Jun 10, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'போர் தொழில்'. இப்படத்தை அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்க அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் நேற்று (09.06.2023) திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படக்குழுவை பாராட்டி வருகின்றனர். மேலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு இயக்குநர் லிங்குசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "போர் தொழில் படத்தை பார்த்து ரசித்தேன். நல்ல கதை மற்றும் இசையுடன் கூடிய மிகச் சிறப்பான படமாக உள்ளது.

சரத்குமாரின் சாரின் நடிப்பு அசத்தலாக இருந்தது. அதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அசோக் செல்வனும் சரத்குமாருக்கு இணையாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT