Por Thozhil ott release update

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'போர் தொழில்'. இப்படத்தை அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்க அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

Advertisment

சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் முதலில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்பு வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் லிங்குசாமி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் படக்குழுவை பாராட்டினர். இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வருகிற 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

திரையரங்கில்நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் ஓடிடியிலும் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.