ADVERTISEMENT

ஐஎம்டிபி-ல் உச்சம் தொட்ட ‘கூச முனுசாமி வீரப்பன்’

12:03 PM Dec 20, 2023 | kavidhasan@nak…

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சீரிஸ் கடந்த 14 ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டுள்ள இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

ADVERTISEMENT

மேலும் இந்த சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து ஜீ5 ஓடிடி தளம் ஒரு சலுகை அறிவித்துள்ளது. இத்தொடரின் முதல் எபிசோடை இலவசமாக பார்க்கலாம் என தெரிவித்தது. இந்த நிலையில் ஐஎம்டிபி ரேட்டிங்கில் இத்தொடர் 9.1 புள்ளிகள் பெற்றுள்ளது. இது குறித்து இத்தொடரின் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயச்சந்திர ஹாஷ்மி, “கஷ்டப்பட்டு உழைச்சோம்னு சொல்றது வெற்றிக்கான தகுதி இல்ல. அது வெற்றிக்கான அடிப்படை. எதை நோக்கி உழைச்சோம்ன்றது தான் எப்பவும் முக்கியம். இந்த வெற்றி அர்த்தம் நிறைஞ்சதா இருக்கு. அதனாலயே இது ரொம்ப ஸ்பெஷல் எங்க எல்லாருக்கும். எல்லாருக்கும் நிறைய நன்றிகள்” என அவரது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT