Various Sectoral Personalities about koose munisamy veerappan

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் கடந்த 14 ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Advertisment

மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டுள்ள இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர்.

Advertisment

இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் வீரப்பனின் மகள் வித்யா, “அப்பாவ முதல் முதலா பார்த்துட்டுவந்துட்டு, துப்பாக்கியெல்லாம் வச்சிக்கிட்டு சில விஷயங்கள் பேசுறாங்க...”

நக்கீரன் ஆசிரியர், “இவ்வளவு செயலுக்கான தகுதி அந்த உருவத்துல இருந்தத... நான் பார்த்தேன்”

Advertisment

வழக்கறிஞர் ப.பா. மோகன், “தமிழகத்தை பாதுகாத்த பெருமை அவருக்கு உண்டு. துப்பாக்கியோடு நின்னு பல பேத்த கொன்னான், காப்பாத்திருக்கான்...”

நிருபர் ஜீவா தங்கவேல், “வீரப்பனை பத்தி என்ன எழுதினாலும் யார் கேட்கப் போறாங்க. வீரப்பனா வந்து கேட்கப் போறாரு, கிடையாது”

நிருபர் மற்றும் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், “காவிரி பிரச்சனைன்னு வந்துட்டா... வீரப்பன் எங்க எந்திரிக்க போறாரு... அப்படின்னுதான் நிறைய பேரு பயந்திட்டு இருந்தாங்க”

சமூக ஆர்வலர் மோகன் குமார், “வனத்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் வீரப்பனால் ஒரு சுள்ளியைக் கூட கொண்டு வர முடியாது...”

இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என். ராம், ”வெறும் ஒரு சாதாரண குற்றவாளி இல்லை. நிறைய திறமை உள்ள ஒரு கேங்ஸ்டர்...”

நடிகை மற்றும்சமூக ஆர்வலர் ரோகிணி, “அவர் செஞ்சிருக்கிற குற்றங்கள் எல்லாம் குற்றங்கள்தான்”

நிருபர் சமியுல்லா, “அவர் ஹீரோவாக ஆக முடியாது.ராபின் ஹூட்டாகவும் முடியாது... கிரிமினல்”

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “அவர் பேருக்கு ஏத்த வீர அப்பன். என்னுடைய வனக் காவலன்”

நிருபர் சுப்பு, “வீரப்பன் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு கெட்டவன்”

வழக்கறிஞர் தமயந்தி, “உண்மையிலே வீரப்பன புடிக்கிறேன்னு போய் ஒன்னும் பண்ணல... போட்டதெல்லாம் சீனு”

அலெக்ஸாண்டர், “அவர் ஹீரோ கிடையாது. தலைமைப் பண்பு இருந்ததெல்லாம் சொல்ல முடியாது. ஏமாத்தியவர்” எனப் பேசுகின்றனர். சீசன் 2 விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.