Skip to main content

புதிய இலக்கை அடைந்த ‘கூச முனுசாமி வீரப்பன்’

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
koose munisamy veerappan cross 125 Million streaming minutes in zee5

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, மற்றும் வசந்த் பாலகிருஷ்ணன் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்திருந்தார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியிருந்தது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருந்தது. 

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸ் மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டிருந்தது. சீசன் 2 வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர்.

இந்த சீரிஸ் வெளியான சில நாட்கள் கழித்து, ஜீ5 ஓடிடி தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. பின்பு சீரிஸீன் முதல் எபிசோடை இலவசமாக பார்க்கலாம் என சலுகை அறிவித்தது. அடுத்து யூட்யூபில் முதல் எபிசோடை மட்டும் வெளியிட்டது. இதனை தொடர்ந்து உலகளவில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது 125 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்து வெற்றிகரமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருவதாக ஜீ5 நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.