new record by koose munisamy veerappan

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸ் மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டிருந்தது. சீசன் 2 வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர்.

Advertisment

இந்த சீரிஸ் வெளியான சில நாட்கள் கழித்து, ஜீ5 ஓடிடி தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. பின்பு சீரிஸீன் முதல் எபிசோடை இலவசமாக பார்க்கலாம் என சலுகை அறிவித்தது. பின்பு யூட்யூபில் முதல் எபிசோடைமட்டும் வெளியிட்டது. இந்த நிலையில் இந்த சீரிஸ் புது சாதனை படைத்து உலகளவில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளதாக ஜீ5 நிறுவனம் தெரிவித்துள்ளது. 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை இந்த சீரிஸ் கடந்துள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisment