ADVERTISEMENT

"இதைப் பின்பற்றி நம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டியது நம் கடமை" - கீர்த்தி சுரேஷ் அறிவுரை!

03:48 PM May 25, 2021 | santhosh

ADVERTISEMENT

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் கரோனா சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி குறித்து வீடியோவில் பேசியுள்ளார். அதில்..

ADVERTISEMENT

"கரோனா தொற்றை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர நாமே, சின்ன சின்ன விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றினால் போதும். தேவை இல்லாமல் வெளியே போகாதீர்கள், அப்படியே போனாலும் மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள். அவசியமான இடங்களில் டபுள் மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அரசு சொல்கிற அனைத்து விதிமுறைகளையும் கடைபிடியுங்கள். நான் என்னுடைய முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். நீங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். இதைத் தான் தமிழ்நாடு அரசும், சுகாதாரத்துறையும் வலியுறுத்துகிறது. இதைப் பின்பற்றி நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளவேண்டியது நம்முடைய கடமை. கரோனவை வெல்வோம்... கரோனாவே இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம் . நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்" எனக் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT