
'பெண்குயின்' படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் 'குட்லக் சகி'. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை நாகேஷ் குக்குனூர் இயக்க, பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் சார்பில் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார்கள். விளையாட்டு, காதல், மற்றும் நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சூடு வீராங்கனையாக நடித்துள்ளார்.
ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் டீசர் இன்று ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.