
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'சாணிக் காயிதம்'. இப்படத்தில், செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இது, செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் படமாகும். இதில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், 'சாணிக்காயிதம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து செல்வராகவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "‘சாணிக்காயிதம்'படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது. என்ன ஒரு அருமையான பயணம்! இப்படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)