Skip to main content

ஆந்திராவில் மாஸ் காட்டிய கீர்த்தி சுரேஷ் ; வைரலாகும் புகைப்படம்

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

Keerthi Suresh showed Mass in Andhra; Photo goes viral

 

2015-ல் வெளியான 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் 'கீர்த்தி சுரேஷ்'. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் நடித்து வருகிறார். 2018-ல் வெளியான 'மகாநதி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அந்த ஆண்டின் 'சிறந்த நடிகை'-க்கான தேசிய விருது பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'சாணிக் காயிதம்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக கீர்த்தி சுரேஷ் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.   

 

இதனிடையே தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'சர்காரு வாரி பாட்டா' படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பரசுராம் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நவீன், ரவிசங்கர் உள்ளிட்ட நான்கு பேர் தயாரித்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. 

 

இந்நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு திரையங்கு முன்பு கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. சினிமா ரசிகர்கள் தனது பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகுவதை முன்னிட்டு திரையங்கு முன்பு கட் அவுட் வைப்பார்கள். அந்த வகையில் நேற்று வெளியான 'சர்காரு வாரி பாட்டா' படத்திற்காக ஆந்திராவில் உள்ள சுதர்சன் திரையரங்கில் கீர்த்தி சுரேஷிற்கு 35-அடி உயரமுள்ள கட் அவுட் வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள். அந்த கட் அவுட் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

அமெரிக்காவில் ஒலித்த தென்னிந்திய பட பாடல்

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
mahesh babu sree leela Kurchi Madatha Petti song played at NBA half time in US

மகேஷ் பாபு, ஸ்ரீ லீலா நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குண்டூர் காரம். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ். ராதா கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சங்கராந்தி விழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி இப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.170 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே படத்தில் இடம்பெற்ற   ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பாடலில் இடம் பெற்ற நடனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. யூ-ட்யூபில் தற்போது வரை 158 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது. 

mahesh babu sree leela Kurchi Madatha Petti song played at NBA half time in US

இந்த நிலையில் இப்பாடல் அமெரிக்கா வரை பரவியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில், கூடைப்பந்து விளையாட்டின் போது, மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் அதில் நடனமாடிய கலைஞர்கள், ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடலுக்கும் நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.