ADVERTISEMENT

'விஸ்வாசம்’ படம் போல் இந்தப் படமும் வரவேற்பை பெறும்' - கரு.பழனியப்பன்

02:18 PM Jan 25, 2019 | santhosh

ADVERTISEMENT

கே.இ.ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில், ராஜு முருகனின் உதவி இயக்குனரான சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிபாதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா 25-01-2019 அன்று நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் ஞானவேல் ராஜாவின் தந்தை ஈஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச். வினோத், நலன் குமாரசாமி, சிறுத்தை சிவா, மௌனகுரு சாந்தகுமார், எழில், கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபு, 2D ராஜசேகர், பாடகர் விஜய் யேசுதாஸ், சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல், நடிகர் சன்னி ஜி, ரமேஷ் பாபு மற்றும் இப்படக்குழுவினரும் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட கரு.பழனியப்பன் பேசியது...

"சரவணன், யுகபாரதி, ராஜு முருகன் ஆகியோர் கஷ்டப்பட்டு தான் வளர்ந்தார்கள். சரவணன் இயக்குனராக ஆசைப்பட்டு அவரது தம்பி ராஜு முருகனை இயக்குனராக்கினார். தற்போது சரவணனும் இயக்குனராகி விட்டார். இருப்பதிலேயே கஷ்டமான தொழில் சமைப்பது தான். அதில் திறமை வாய்ந்தவர் ஹீரோ ரங்கராஜ். இந்த படத்திலும் அவர் அறுசுவை விருந்தாக படத்தை கொடுப்பார். தற்போது விஸ்வாசம் போன்ற குடும்ப படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் இந்த படமும் இருக்கும்.”

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT