ஸ்டியோ க்ரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து, ராஜுமுருகனின் கதை, வசனத்தில் சரவண ராஜேந்திரனின் திரைக்கதை, இயக்கதில் உருவான மெஹந்தி சர்க்கஸ் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட ஆர்.ஜே விக்னேஷ் காந்த் பேசியபோது....

Advertisment

rj vignesh

"மெஹந்தி சர்க்கஸ் ஒரு சுகமான அனுபவம். ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளை இரண்டு மணி நேரம் ஜாலியாக வைத்திருப்பது சர்க்கஸ் கலை தான். அந்தக்கலை இப்போது அழிந்து வருகிறது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம். அப்படியொரு கலையை சினிமாவில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஷான் ரோல்டன் இசையில் வச்சி செய்திருக்கிறார். ராஜா சார் இசை ஒரு இடத்தில் வருகிறது. ஷான் ரோல்டன் இசை ஒரு இடத்தில் இரண்டுமே கேட்க நன்றாக இருக்கிறது. இந்தப்படத்தின் செளக்கிதார் இயக்குநர் சரவண ராஜேந்திரன், இயக்குனர்களின் செளக்கிதார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர்களின் செளக்கிதார் படத்தை வெளியீடும் திரு சக்திவேல் சார் அவர்கள். எதற்காக இப்படி அரசியலைப் பேசுகிறேன் என்றால் இந்தப்படத்தில் என் கேரக்டர் அப்படி" என்றார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/fJNIHMxQozo.jpg?itok=EGg4tTuU","video_url":" Video (Responsive, autoplaying)."]}