ஸ்டியோ க்ரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து, ராஜுமுருகனின் கதை, வசனத்தில் சரவண ராஜேந்திரனின் திரைக்கதை, இயக்கதில் உருவான மெஹந்தி சர்க்கஸ் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட இப்படத்தின் கதை வசனகர்த்தா இயக்குனர் ராஜு முருகன் பேசியபோது...

Advertisment

raju

"இந்தப்படம் தொடங்குவதற்கான துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் அவர்களுக்கும் ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி. இந்தப்படம் ரொம்ப எளிமையான நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் படம். இந்தக் கதையின் பின்னணி ஒரு வித்தியாசமாக இருக்கும். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் அடுத்த லெவலுக்குச் செல்வார். இசை அமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் என் பெயர் இருக்கு. ஆனால் கதை முழுக்க முழுக்க என் அண்ணனும் இணைந்து தான் எழுதினார். அண்ணனின் உழைப்பு மிகப்பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.