ADVERTISEMENT

கைதி 2 எப்போது? மேடையிலேயே அப்டேட் கொடுத்த கார்த்தி

10:10 AM Aug 10, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதோடு, ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது. இதனைத்தொடர்ந்து கைதி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இதனிடையே கைதி படத்தின் சீக்குவலாக வெளியான விக்ரம் படமும் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கமல், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட 4 முன்னணி நடிகர்கள் நடித்த விக்ரம் படம், ரசிகர்கள் மத்தியில் கைதி 2 படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


இந்நிலையில் விருமன் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி அண்மையில் கேரளாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கார்த்தியிடம் கைதி 2 படம் எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, கைதி 2 அடுத்தாண்டு தொடங்கும். லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் தளபதி 67 படத்தில் கவனம் செலுத்தி வருவதால், அந்த படத்தை முடித்த பிறகு கைதி 2 படத்தின் பணிகள் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படம் நாளை மறுநாள் (12.8.2022) திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT