producer sr prabhu talk about kaithi 2 film

கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதோடு, ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது. இதனைத்தொடர்ந்துகைதி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இதனிடையே கைதி படத்தின்சீக்குவலாகவெளியான விக்ரம் படமும் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கமல், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட 4 முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படம் கைதி 2 படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வியைஎழுப்பியுள்ளது.

Advertisment

இந்நிலையில் ட்விட்டர் ஸ்பேசில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர் பிரபு கைதி 2 படம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், கைதி படம் கட்டாயம் தொடங்கப்படும், ஆனால் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்கி முடித்தபிறகேகைதி 2 படத்தின் பணிகள் தொடங்கப்படும். அதுமட்டுமில்லமல்கைதி படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பத்து மடங்கு பெரியதாக இருக்கும்" என்றார். இதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர் தளபதி 67 படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். இதற்குபதிலளித்த எஸ்.ஆர் பிரபு, "அது கதையின் தேவையைபொறுத்தது. தேவையென்றால் லோகேஷும், கமலும் முடிவெடுப்பார்கள்" என்றார்.

Advertisment