/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/411_26.jpg)
'ஜப்பான்' படத்தைத் தொடர்ந்து கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உட்பட பலர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் 96 பிரேம் குமார் இயக்கத்திலும் ஒரு படம் நடித்து வந்தார். கார்த்தியின் 27வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. அதோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கார்த்தி, கைதி 2 குறித்து பேசினார். கைதியில் நடித்த டில்லி கதாபாத்திர வசனமான, “உள்ள போறதுக்கு முன்னாடி என்ன பண்ணிகிட்டு இருந்தன்னு தெரியாதுல...” என்று பேசிய அவர், “டில்லி திரும்பி வருவான். அடுத்த வருஷம் ஆரம்பித்துவிடுவோம்” என்றார். மேலும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களை முடித்து விடுவதாகவும், லோகேஷும் ரஜினி படத்தை முடித்துவிட்டு ‘கைதி 2’ எடுக்கவுள்ளதாககூறியுள்ளதாகவும்தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் கைதி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு முன்பேதெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)