/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kaithi_4.jpg)
‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கியிருந்தார். அஞ்சாதே நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. ‘கைதி’ படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக இருந்துவருகின்றனர்.
இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர் கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்காகயார் யார் காத்திருக்கிறீர்கள்என டீவ்ட் செய்திருந்தார். இந்த டீவீட்டை ரீடீவ்ட்செய்த கைதி பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உங்களை போன்றே நானும் கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்குகாத்திருக்கிறேன் என்ற வகையில் ஸ்டிக்கர் எமோஜியை பதிவிட்டுள்ளார்.
??♂️? https://t.co/ZL6IbkLvUN
— SR Prabhu (@prabhu_sr) December 28, 2021
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)