ADVERTISEMENT

நடிகர் விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து

03:37 PM Jun 22, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றனர். சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது 48 வது பிறந்தநாளை இன்று(22.6.2022) கொண்டாடுகிறார். இதனைத்தொடர்ந்து விஜய்க்கு நடிகர் தனுஷ், கீர்த்தி சுரேஷ், அனிருத், நெல்சன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் நடிகர் விஜய்யை தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT