sj surya play gust role in vijay varisu movie

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின்'ரஞ்சிதமே' பாடலை தொடர்ந்து சிம்பு பாடியுள்ள 'தீ தளபதி' பாடல் அடுத்துவெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="252e99b0-8e63-49af-a721-79718883ff04" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_28.jpg" />

Advertisment

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனால் விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

'வாரிசு' படக்குழு, படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டிருந்த வீடியோவில் எஸ்.ஜே சூர்யா இடம் பெற்றிருந்தார். இதன் மூலம் எஸ்.ஜே சூர்யா நடித்திருப்பது உறுதியான நிலையில் அவர் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக விஜய்யின் 'நண்பன்' படத்தில் எஸ்.ஜே சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.அந்த வகையில் 'வாரிசு' படத்திலும் எஸ்.ஜே சூர்யா நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.