Kamal Haasan, Shah Rukh Khan, and Mahesh Babu to attend the audio launch of Vijay Varisu

Advertisment

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

வரும் பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் தமிழகத்தில் 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' நிறுவனத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடுகிறார். ஏற்கனவே இப்படத்தில் விஜய் பாடிய 'ரஞ்சிதமே', சிம்பு பாடிய 'தீ தளபதி' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் மூன்றாவது பாடலான அம்மா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 24ஆம் தேதி எனதற்போது உறுதியாகியுள்ளது. விஜய்யின் வாழ்த்துகளோடு இசைவெளியீட்டிற்கான அனுமதி கூப்பன்களை அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இசை வெளியீட்டிற்கு தென்னிந்திய திரையுலகின் முன்னணி திரை பிரபலங்களான கமல்ஹாசன், மகேஷ் பாபு மற்றும் ஷாருக்கான் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. பிரமாண்டமாக நடைபெறவுள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.