Jyothika

36 வயதினிலே படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நடிகை ஜோதிகா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். இவர் நடிப்பில் வெளியான மகளிர் மட்டும், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சசிகுமாருடன் இணைந்து நடித்துள்ள ‘உடன்பிறப்பே’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில், இதுவரை எந்த சமூக வலைத்தளங்களிலும் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருக்காமல் இருந்தநடிகை ஜோதிகா, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். ஜோதிகாவின் இந்தப் பக்கத்தை 16 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு தொடங்கியுள்ளதாக அறிவித்த நடிகை ஜோதிகா, சுதந்திர தினத்தன்று இமயமலையில் ட்ரெக்கிங் செய்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்த நிலையில், ட்ரெக்கிங் செய்தபோது எடுத்த வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார். நடிகை ஜோதிகாவின் இமயமலை ட்ரெக்கிங் வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisment