ADVERTISEMENT

பிரமாண்டமாக உருவாகும் மோகன்லால் படம் - கமலை தொடர்ந்து கமிட்டான மற்றொரு பிரபலம்?

01:33 PM Jan 25, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் தற்போது 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 'ஜல்லிக்கட்டு' படம் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்க, படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாவதாகவும் முழு படப்பிடிப்பும் ராஜஸ்தானில் நடக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ரஜினி நடிப்பில் தமிழில் உருவாகும் 'ஜெயிலர்' படத்திலும் மோகன்லால் நடித்து வருகிறார். 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெரேடி, கதா நந்தி உள்ளிட்ட பலர் நடிக்கும் நிலையில் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகர் ஜீவாவும் இப்படத்தில் கமலுடன் இணைந்து கேமியோ ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் விரைவில் அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீவா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான 'கீர்த்தி சக்ரா' படத்தில் ஜீவா நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது 16 வருடம் கழித்து மீண்டும் மோகன்லால் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT