kamalhassan about former cm anna

Advertisment

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆங்காங்கே உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். திரைப்பிரபலங்களும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அண்ணாவின் பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், "பேச்சாற்றல் எழுத்தாற்றல் சிந்தனையாற்றல் என்ற மூன்று பெரும் உபகரணங்களால் மறுமலர்ச்சிச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைத்த முன்னோடி.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கிற மூன்றுசொற்களை மந்திரம் போல இளைஞர்களின் மனதுக்குப் பழக்கிய ஆசான். தன் கொள்கைப் பிடிப்பால் இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன்" என அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.