Kamal in Papanasam movie is ready to remake in Hollywood

Advertisment

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து த்ரிஷ்யம் 2 நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்க தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்தியில் அஜய் தேவ்கனால்ரீமேக் செய்யப்பட்ட நிலையில், நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்த இரண்டு படங்களும் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக்காக உள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகக்கூறப்படுகிறது. மேலும், ஆங்கிலம் உள்பட சீன மொழி உரிமையையும் வாங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும், கொரிய,ஜப்பானியமொழிகளின்உரிமையைக் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பேசப்படுகிறது.

இப்படத்தின் மூன்றாம் பாகம் எடுக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பு குறைவுதான் என்கிறது மலையாளத்திரையுலக வட்டாரம்.