/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/946_1.jpg)
இயக்குநர்லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.மேலும் இப்படத்தின் வசூல் 300 கோடியைத்தாண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத்தெரிகிறது.
இதனிடையேநடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்காகலோகேஷ்கனகராஜுக்குலெக்சஸ்கார்ஒன்றையும், படத்தில் உதவி இயக்குநராகபணியாற்றிய 13 பேருக்குடிவிஎஸ்அப்பாச்சிRTR 160பைக்கைபரிசாக அளித்தார்.அத்துடன்விக்ரம் படத்தில்சிறப்புத்தோற்றத்தில் நடித்த சூர்யாவிற்கு விலை உயர்ந்தரோலக்ஸ்கடிகாரத்தைப்பரிசாக அளித்தார்.
இந்நிலையில் விக்ரம் படம்வெற்றியைத்தொடர்ந்து கேரளாவில் படக்குழுவினர்பத்திரிகையாளர்களைச்சந்தித்துப்பலகேள்விகளுக்குபதிலளித்தனர். அப்போது நிருபர் ஒருவர், விக்ரம்வெற்றியைத்தொடர்ந்து கமல்ஹாசன்லோகேஷுக்குகார்,சூர்யாவுக்குகடிகாரம் கொடுத்தார்.அனிருத்துக்குஎன்ன கொடுத்தார் எனக் கேள்வி எழுப்பினர். இதற்குஅனிருத்சற்றும் யோசிக்காமல் விக்ரம் படம் கொடுத்தார் என்று பதிலளித்தார்.இதைக்கேட்டஅரங்கத்திலிருந்தோர்வாய்விட்டுச்சிரித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)