ADVERTISEMENT

காரின் பதிவெண்ணிற்கு 34 லட்சங்களை செலவழித்த ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்!

04:27 PM Nov 28, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சினிமா என்பதை பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அதை மிகவும் நேசித்து, தனக்குப் பிடித்த சினிமாவிற்காகவும், சினிமா நட்சத்திரத்திற்காகவும் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள். அகமதாபாத்தைச் சேர்ந்த ஆஷிக் படேல், இரண்டாவது வகை.

புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்டின் ரசிகரான இவர், சமீபத்தில் 39.5 லட்சத்திற்கு விலையுயர்ந்த காரினை வாங்கியுள்ளார். காருக்குப் பதிவு எண் வாங்குவதற்கு, அகமதாபாத்தின் போக்குவரத்து அலுவலகத்தை தொடர்புகொண்ட இவர், ஜேம்ஸ் பாண்டின் '007' என்ற எண்ணைப் பதிவு எண்ணாகக் கேட்டுள்ளார். அது ஃபேன்சி எண் என்பதால், ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலத்தில், '007' எண்ணுக்குத் தொடக்க விலையாக, 25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நடந்த ஏலத்தில், ஆஷிக் படேல் 34 லட்சத்திற்கு, '007' எண்ணை வாங்கியுள்ளார். அவருக்கு, "ஜி.ஜே.01.டபிள்யூ.ஏ.007" என்ற பதிவு எண்ணை, அகமதாபாத் போக்குவரத்து அலுவலம் வழங்கியுள்ளது. இதைப்பற்றி ஆஷிக் கூறுகையில், "நான் என் முதல் காருக்கு '007' என்ற எண்ணை வாங்கியிருக்கிறேன், இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பணத்தைப் பொறுத்தது அல்ல. இந்த எண், எனக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்ற என் நம்பிக்கையைப் பொறுத்தது" எனக் கூறியுள்ளார். காரின் பதிவெண்ணிற்காக, 34 லட்சம் வரை ஒருவர் செலவு செய்துள்ளது, பலரையும் திகைப்படையச் செய்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT