ஜேம்ஸ் பாண்ட் தொடரின் அடுத்த படத்தின் பெயர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

Advertisment

daniel craig

பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த தொடரில் இதுவரை 24 படம் வந்துள்ளது. அதில் தற்போது உருவாகி வரும் படம் இந்த தொடரின் 25வது படமாகும். ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் அந்த ஸ்பை கதாபாத்திரங்களும், வித்தியாசமான தொழில்நுட்பங்களும் மிகவும் பெரிதாக பேசப்பட்டன. இந்த தொடருக்கு உலகம் முழுவதிலும் ரசிககர்கள் ஏராளமாக உள்ளனர். குறிப்பாக தமிழகத்திலும் ஜேம்ஸ் பாண்ட் தொடருக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

Advertisment

கடந்த 1962ஆம் ஆண்டு டாக்டர் நோ என்ற பெயரில் முதன் முதலாக ஜேம்ஸ் பாண்ட் 007 தொடர் வெளியானது. கடந்த 2015ல் கடைசியாக இத்தொடரில் வெளியான படம் ஸ்பெக்டர். இதில் டேனியல் கிரேக் பாண்டாக நடித்திருந்தார்.

இந்நிலையில், ஜேம்ஸ் பாண்ட் வரிசையின் 25-வது படத்திற்கு 'நோ டைம் டூ டை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் டேனியல்கிரேக் கதாநாயகனாகவும், ஆஸ்கார் விருது வென்ற ரமி மெல்கி வில்லனாகவும் நடிக்கிறார்.

Advertisment

இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடித்து வரும் படத்தை சேர்த்து மொத்தம் ஐந்து ஜேம்ஸ் பாண்ட் படங்களில் டேனியல் கிரேக் நடித்திருக்கிறார்.