/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shan-connery-im.jpg)
உலகளவில் மிகவும் புகழ்பெற்றகதாபாத்திரம் ஜேம்ஸ்பாண்ட். இப்புகழ் பெற்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கும், ரசிகர்களிடையே புகழ் பெற்றுவிடுவார்கள். அந்தளவிற்கு சிறப்பானஇந்த ஜேம்ஸ்பாண்ட்கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடித்தவர்ஷான்கானரி. மேலும் இவர் 1962 முதல் 1983 வரை ஏழு ஜேம்ஸ்பாண்ட்படங்களில் நடித்துள்ளார்.
புகழ்பெற்றநடிகரானஷான்கானரி,கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி, அவரதுஇல்லத்தில் காலமானார். 90 வயதானஅவரின்உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது.இதனைத்தொடர்ந்து உலகமெங்கிலும் உள்ள ஜேம்ஸ்பாண்ட்ரசிகர்கள், சமூகவலைதளங்கள் மூலமாகதங்கள் அஞ்சலியை செலுத்தினர்.
இந்தநிலையில், ஷான்கானேரியின் இறப்பு சான்றிதழ் தற்போது வெளியாகிவுள்ளது. அதில்ஷான்கானரி, நிமோனியாவாலும், இருதய செயலிழப்பு காரணமாகவும் மரணமடைந்ததாக அதில்கூறப்பட்டுள்ளது. மேலும் இருதய செயலிழப்பு, வயது முதிர்வினால் ஏற்பட்டது எனவும்கூறப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)