சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 6518 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1,69,610 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 110 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

olga

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

உலகமே கரோனா வைரஸால் பீதியடைந்துள்ள நிலையில், ‘குவாண்டம் ஆஃப் சொலாஸ்’, ‘ஒபிலிவியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஓல்கா குரிலென்கோ என்ற நடிகைக்கு கரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், '' கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு வீட்டில் அடைபட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஒருவாரமாகவே எனக்கு உடல்நிலை சரியாக இல்லை. கடும் சோர்வும், காய்ச்சலும் முக்கிய அறிகுறிகள். இதைக் கவனத்தில் கொண்டு உங்கள் உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று ஓல்கா குரிலென்கோ தெரிவித்துள்ளார்.