ADVERTISEMENT

'ஜெயில்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

06:13 PM Dec 01, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், படத்தைத் திரைக்குக் கொண்டுவருவதில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. இப்படத்தை க்ரிக்ஸ் சினிமாஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், படத்தின் பாடல்கள் குறித்த அறிவிப்பைப் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், "‘ஜெயில்’ படத்தின் இசை ஆல்பம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும்" எனக் குறிப்பிட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT