Skip to main content

"இருளில் இருக்கும் நகரோடிகள் மீது சிறு வெளிச்சம் பாய்ச்சிட வேண்டும்"  - இயக்குநர் வசந்தபாலன் அறிக்கை 

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

director vasanthabalan talk about jail movie

 

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தை க்ரிக்ஸ் சினிமாஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ஜெயில்’ திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு  அறிவித்துள்ளது.

 

ad

 

இந்நிலையில் 'ஜெயில்' படம் குறித்து இயக்குநர் வசந்தபாலன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்," நிலம்தான் வாழ்வு, நிலம்தான் அடையாளம், நிலம்தான் அதிகாரம், நிலம்தான் போராட்டம்,  நிலம்தான் யுத்தம், நிலம்தான் இனவிடுதலை, நிலம்தான் வரலாறு, நிலம்தான் சகலமும், நீங்கள் நம்பாவிட்டால் போங்கள். நமது எஜமானர்கள் இதை பரிபூரணமாக நம்புகிறார்கள். அதனால்தான் நமது நிலங்களில் இருந்து நம்மை முற்றாக துரத்தி அடிக்க விரும்புகிறார்கள் என்கிறார் கவிஞர் லிபி ஆரண்யா.

 

சென்னையில் மட்டும் ஐந்தரை லட்சம் மக்கள் மறுகுடியமர்வில் தங்களின் கல்வி, வேலை, வாழ்வாதாரம் ஆரோக்கியத்தை இழந்துள்ளனர். இந்த ஐந்தரை லட்சம் சென்னையில் மட்டும் என்றால் உலக அளவில் யோசித்துப் பாருங்கள். நிலம் மற்றும் அதன் மீதான நமது வாழ்வு குறித்தும், அதன் விழுமியங்கள் குறித்தும் நாம் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  நிலத்தோடு தொடர்புள்ள வாழ்வின் சில அறங்கள் மற்றும் மனித இயல்புகள் புலம் பெயர்ந்த நிலத்தோடு தொடர்பற்ற வாழ்வில் சிதைந்து போகும் துயரை இந்த படம் பேசுகிறது. அடித்தட்டு மக்களை குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டதை  மட்டும் நோக்கி கேள்வி எழுப்ப போகிறோமா அல்லது அவனை குற்றவாளியாக ஆக்குகின்ற அமைப்பை, அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்ப போகிறோமா? நான் எப்போதும் ஆணிவேரை நோக்கி என் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். இதைத் தாண்டி படத்தில் இருக்கும் காதல், நட்பு, ஆக்ஷன், போதைப்பொருள்  இவையெல்லாம் ஒரு சுவாரசியமான கதையை சொல்வதற்காக பயன்படுத்திக்கொண்ட காரணிகள் மட்டுமே. ஆகையால் அவை மீது பயணம் செய்யாமல் வலுக்கட்டாயமான மறுகுடியமர்வின் சாதக பாதகங்களைப் பற்றி தீவிரமாக விவாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இருளில் புதைந்து கிடக்கும் நகரோடிகளின் மீது ஒரு சிறு வெளிச்சம் பாய்ச்சப்பட வேண்டும் என்பதுதான் இப்படத்தின் நோக்கம்" என குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அந்த கதாபாத்திரமாகத் தோற்றமளிக்கிறார்கள்” - வசந்த பாலன் பாராட்டு

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
vasantha balan praised gv kalvan movie

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. ட்ரைலரை பார்க்கையில் காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிந்தது. இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடந்து முடிந்த நிலையில் படம் பார்த்த பிரபலங்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இயக்குநர் வசந்த பாலன் படக்குழுவை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “நேற்று கள்வன் திரைப்படம் பார்த்தேன். இரண்டு திருடர்களின் வாழ்வில் பாரதிராஜா சாரும் யானையும் நுழையும் போது என்னாகிறது? என்கிற கதையில் கிராமம், அசலான கிராமத்து மனிதர்கள் என திரைப்படம் சுவாரஸ்யமாக நகர்கிறது. ஜி.வி பிரகாஷும் பாரதிராஜா சாரும் அந்த கதாபாத்திரமாக தோற்றமளிக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

vasantha balan praised gv kalvan movie

ஆர்யா, “டார்லிங் ஜி.வி ப்ரகாஷ் நடித்துள்ள கள்வன் படம் சுவாரசியமான பின்னணியில் ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது. எமோஷ்னலாக பெரிதளவு கனெக்ட் ஆகிறது. பாரதிராஜா சார் அற்புதமாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷுடன் அவரின் கெமிஸ்ட்ரி ரசிக்கும்படியாக இருக்கிறது. நெகட்டிவ் ஷேடில் ஜி.வி பிரகாஷ் நடித்திருப்பது எதிர்பாராத ஒன்று. அதை சரியாக பண்ணியுள்ளார்” என எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

ஐஸ்வர்யா ராஜேஷ்,அவரது எக்ஸ் பக்கத்தில் “கள்வன் ஒரு யதார்த்தமான த்ரில்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை உங்களை சுவாரஸ்யமாக்கும். ஜி.வி பிரகாஷ் மீண்டும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக யானையோடு அவர் துரத்தும் காட்சி சிறப்பாக உள்ளது” எனக் குறிப்பிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்.

Next Story

ராஜேஸ் தாஷுக்கு சிறைத்தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Former DGP Rajesh Das gets 3 jail sentence

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி, அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கத் தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” எனக் குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல் முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12 ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்று, ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.