ADVERTISEMENT

இதில் நயன்தாரா, யோகிபாபு காம்பினேஷன் வேறமாதிரி இருக்கும்... - இயக்குனர் சர்ஜுன் கொடுத்த 'ஐரா' அப்டேட்ஸ்

02:00 PM Mar 21, 2019 | george@nakkheeran.in

நயன்தாரா இருவேடங்களில் நடித்திருக்கும் ஐரா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. தொடர்ந்து படத்தின் இயக்குனர் சர்ஜுன் நம்முடன் பகிர்ந்துகொண்ட தகவல்களின் தொகுப்பு.

ADVERTISEMENT



ஐரா படம் உருவாவதற்கு முன்பு, இப்படி ஒரு ஹாரர் படம் எடுக்கணும் என்கிற எண்ணம் எப்படி வந்தது?

ADVERTISEMENT

எனக்கு ஹாரர் படம் எடுக்கிற எண்ணமே இல்லை. நயன்தாராவுக்கு ஒரு ஹாரர் கதை தேவை என்றுதான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. இதை நழுவவிட வேண்டாமென்று எடுத்த படம்தான் ‘ஐரா’. முதலில் கதையோட ஒரு வரியை மட்டும் நயன்தாராவிடம் சொன்னோம், அவங்களுக்கு பிடிச்சப் பிறகுதான் முழு திரைக்கதையையும் எழுதினோம். நயன்தாராவுக்குனு தனி மதிப்பு இருக்கு, இதுக்கு முன்னாடி நிறைய வெற்றிப்படங்களில் நடிச்சுருக்காங்க, அதையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு எழுதவேண்டிய பொறுப்பு எனக்கு இருந்துச்சு. இதை கஷ்டம்னு சொல்ல மாட்டேன், ஆனால் சேலஞ்சான விஷயமா எடுத்துக்கிட்டு செஞ்சு முடிச்சுருக்கேன்.


ஐரா படத்தில் வசனங்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கீங்க?

இந்தப் படத்தில் வசனத்திற்கு நிறையவே முக்கியத்துவம் கொடுத்திருக்கோம். இதுல் ஒரு சென்சிட்டிவான விஷயத்தை கையாண்டுருக்கோம். சொல்லவந்த விஷயத்தை சரியான வசனம் மூலமாக சொல்லணும், கொஞ்சம் மாறினாலும் தப்பான கருத்துப் போய்சேந்துடும். அதனாலேயே வசனங்களில் கவனமாக இருந்தோம். சில இடங்களில் வருகிற வசனங்கள் மனதைப் பாதிக்கிறவகையில் இருக்கும்.

படத்தில் நயன்தாராவின் நடிப்பு எந்தமாதிரி இருக்கும்? அவர்களைத் தவிர வேறு யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்?

எழுதும்போதே கேரக்டர்களை வித்தியாசமாக எழுதிவிட்டால் நடிப்பும் அதற்கேற்றால்போல் வித்தியாசமாகக் கிடைத்துவிடும். படத்தில் வரும் இரண்டு கேரக்டருக்கும் வேவ்வேறு சமூக சூழல்கள், வளர்ந்தவிதம், குணம் என எல்லாம் மாறுபட்டிருக்கும். அதிலும் நயன்தார இந்தப்படதில் சூப்பரா நடிச்சுருக்காங்க. அது படம் பார்க்கும்போது தெரியும். அவங்களைத் தவிர படத்தில் அமுதன் என்ற கேரக்டரில் கலையரசன் நடிக்கிறார். அவர் இதற்கு முன்பு அதிகமாக ரகடான கேரக்டர்களில் மட்டும் நடித்திருக்கிறார். ஆனால், இந்தப் படத்தில் 35 வயது கடந்த அமைதியான கேரக்டரில் நடிக்க வேண்டும். இதற்கு முன்னாடி நடித்ததையெல்லாம் மறந்துடுங்க, இதில் முழுசா வேறமாதிரி இருக்கணும்னு கேட்டேன். மேக்-அப் போட்டு தோற்றத்தை மாத்தினப்பிறகு அவரும் கேரக்டரா மாறிட்டாரு. இவங்கயில்லாமல் லீலா பாட்டி, ஜெயப்பிரகஷ், யோகிபாபு ஆகியோரும் ஐரா படத்தில் நடித்துள்ளனர்.

கோலமாவு கோகிலா படத்தில் இருப்பதுபோல் நயன்தாரவுக்கும் யோகிபாபுக்கும் காமினேஷன் காட்சிகள் எப்படி வந்துருக்கு?

அந்த படத்தில் வருவதுபோல் இருக்கும் என எதிர்பார்த்துவந்தால் ஏமார்ந்துப்போவார்கள். இந்தப்படம் முழுசா வேறமாதிரி இருக்கும். கதையில் யோகிபாபு ஒரு கேரக்டர் மட்டும்தான், ஆரம்பத்தில் ஒரு இதமாக காமெடி ட்ராக் வரும், அப்போது யோகிபாபுக்கும், நயந்தாராவுக்கும் காமினேஷன் காட்சிகள் இருக்கும். பாதிக்குமேல் படம் சீரியசாக மாறிடும்.

ஒரு இளம் இயக்குனராக என்னோட படங்களில் இதெல்லாம் இருக்கணும், இதெல்லாம் இருக்கக்கூடாது அப்படிங்குற கொள்கைகள் இருக்கா?

எல்லோருக்கும் அந்தமாதிரி கொள்கைகள் இருக்கும். என்னோட படம் எல்லோருக்கும் பிடிக்கணும், அதே நேரத்தில் ஜெயிக்கவும் செய்யணும். பிடிச்சப் படம் ஜெயிக்கலைனாலும் பிரச்சனை, ஜெயிச்சப்படம் யாருக்கும் பிடிகலைனாலும் பிரச்சனை. ரெண்டுமே இருக்கிறமாதிரிதான் நான் கதை எழுதுவேன். என் முதல் படம் எச்சரிக்கையையும் அப்படித்தான் எடுத்தேன். இருந்தாலும் அது ஜெயிக்கலை. அதற்கு பல காரணம் இருக்கு. ஆனால், ஐரா படத்தை எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய, வியாபாரரீதியிலும் ஜெயிக்கக்கூடிய ஒரு பேக்கேஜ் படமாகத்தான் எடுத்திருக்கேன். அதுதவிர எனக்கு இந்தமாதிரியான படங்கள்தான் எடுக்கணும்னு ஒன்னும் இல்லை. ஆக்‌ஷன் படமாக இருந்தாலும் நான் பண்ணுவேன், கமெர்ஷியல் படமாக இருந்தாலும் நான் ஜாலியாக எடுப்பேன்.

எல்லோரும் லேடி சூப்பர் ஸ்டார் அப்படினு கொண்டாகிறவர் நயன்தாரா. அவருடைய மனநிலை இப்போ எப்படி இருக்கு? எந்தமாதிரி கதைகளை தேர்ந்தெடுக்கிறார்?

நயன்தார இப்போ 63வது படம் நடிக்கிறாங்க. அநேகமாக அவங்களுக்குத் தெரியும் எந்தக் கதை ஒர்க்கவுட் ஆகும், எந்தக் கதை ஒர்க்கவுட் ஆகாதுனு. அவங்க தேர்ந்தெடுக்கிற கதைகள் எல்லாமெ க்ளவராகவும், சரியானதாகவும் இருக்கும். அவங்க எப்படி யோசிக்குறாங்கனு எனக்குத் தெரியவில்லை. ஆனால், கதைச் சொல்லும்போது அதை அவங்களால யூகிக்கமுடியும். சில கதைகளை நான் ஏன் வேண்டாம்னு சொன்னேன்னு என்கிட்ட சொல்லியிருக்காங்க, அந்தக் கதைகள் படமாக தியேட்டருக்கு வந்து ஓடாமல் போனதையும் நான் பார்த்திருக்கிறேன். அவங்க ரொம்ப சரியாக முடிவெடுக்குறாங்க. அந்த முடிவுகள் சரியாக இருப்பதால் அவங்க நல்ல ஸ்டாராக இருக்கிறார். இந்த படத்தோட கதையிலும் எல்லோருடம் கனேக்டாகக் கூடிய, நம்ப வீட்டில் இருக்கிற அம்மாவுக்கும், அக்காவுக்கு, தங்கச்சிக்கும் நடந்திருக்ககூடிய ஒரு விஷயத்தை சொல்லியிருக்கோம். அது படம் பார்க்கிறவர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT