பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் காமெடி நடிகர் யோகிபாபு. தற்போது அவருடைய கதாபாத்திரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி போன்ற படங்கள் அவரை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. அதில் தர்மபிரபு வெளியாகியுள்ளது.

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருந்தார். இந்நிலையில் யோகிபாபுவுடன் அஞ்சலி ஜோடியாக இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பேன்டஸி காமெடி பின்னணியில் உருவாகும் இப்படத்தை சொன்னா புரியாது பட இயக்குநர் கிருஷ்ணா இயக்குகிறார்.
பாலூன் திரைப்படத்தின் மூல இயக்குநராக அறிமுகமான சினிஷ்தான் இந்த படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய் டிவி ராமரும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கூடைப்பந்து பயிற்சியாளராக வரும் அஞ்சலியை ஒருதலையாக காதல் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகிபாபு. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இப்படத்தின் ஷூட்டிங் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்படுகிறது. இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.