தமிழ் திரைப்படங்களில் முன்னணி காமெடி நடிகா்களில் ஒருவரான யோகிபாபு நடித்து இருக்கும் திரைப்படம் காக்டெயில். இந்த படத்தில் யோகிபாபு முருக கடவுள் வேடத்தில் நடித்து இருக்கும் ஒரு புகைப்படம் டீசரில் வெளியானது. இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

Advertisment

Actor Yogibabu issue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அழகிய விநாயகா் கோவில் காவடி பக்தா்கள் சங்கம் சார்பில் தலைவா் நாராயணன் அஞ்சுகிராமம் போலீஸில் நடிகா் யோகிபாபு மீது புகார் அளித்தார். அதில், "மதுகலவை என்று பொருள்படும் காக்டெயில் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கும் யோகிபாபு முருக பெருமான் வேடமணிந்து நடித்திருக்கிறார். அப்படி வேடமணிந்து நடிக்கும் என காக்டெயில் பெயா் வைக்கப்பட்டிருப்பது, நாங்கள் பக்தியுடன் வழிபடும் தமிழ் கடவுளான முருக கடவுளையும் இந்து மதத்தையும் இழிவுபடுத்தி முருக பக்தா்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் நடிகா் யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.