ADVERTISEMENT

'விக்ரம்' படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் - இணையத்தில் வைரல்

07:29 PM Jun 06, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை (03.06.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ், தன் இயக்கத்தில் 2019-ஆண்டு வெளியான 'கைதி' படத்தில் பழைய பாடல்களை பயன்படுத்தியிருப்பார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அந்தவகையில் தற்போது வெளியாகியிருக்கும் 'விக்ரம்' படத்திலும் 'சக்கு சக்கு வத்திக்குச்சி' என்ற பழைய பாடலை பயன்படுத்தியுள்ளார். இதற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் அந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நெகிழ்ச்சியடைந்துள்ளார். ஏனென்றால் 'சக்கு சக்கு வத்திக்குச்சி' பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் ப்ரோகிராமிங் செய்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்தான ட்விட்டர் பதிவில், " 'சக்கு சக்கு வத்திக்குச்சி', திரு.ஆதித்தன் இசையமைத்து, நான் ப்ரோகிராம் செய்த இந்த விண்டேஜ் பாடல் வைரலாகி வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT