'Vikram' Overseas Rights: 'KGF2' distributors join hands with Kamal

நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் நடிப்பில் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள படம் 'விக்ரம்'. கடைசியாக இவர் நடிப்பில் 'விஸ்வரூபம் 2' படம் வெளியானது. அதன் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார். படத்தின் அனைத்து பணிகளும் தற்போது முடிவடைந்த நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வரும் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது . மேலும் மே 18-ஆம் தேதி பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் ட்ரைலர் திரையிடப்படவுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் வெளிநாட்டு உரிமை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'கே.ஜி.எஃப் 2' படத்தை வெளிநாட்டில் வெளியிட்ட 'ஏபி இன்டர்நேஷனல்' நிறுவனம் 'விக்ரம்' படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. மேலும் அமெரிக்காவில் 'ப்ரைம் மீடியா' நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ்நாட்டில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisment