/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-10_10.jpg)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி 'சந்தானம்' என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் 'அமர்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (03.06.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனிடையே 'விக்ரம்' படத்தின் முதல் நாளின் வசூல் விவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடியும், உலகம் முழுவதும் 45 கோடியும் வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும் 'விக்ரம்' படம் விரைவில் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூல் செய்யும் என விநியோகஸ்தர்கள் கூறுவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)