Skip to main content

'பிளான் செய்த படி விரைவில் இணைவோம்' - கமல்ஹாசன் ட்வீட்

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

'We will join as soon as planned' - Kamalhasan tweeted

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி 'சந்தானம்' என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் 'அமர்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (03.06.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, 'விக்ரம்' படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.  ரத்னவேலு, தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் 'விக்ரம்' படக்குழுவினரை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அந்த பதிவை ரீட்விட் செய்த கமல்ஹாசன், ரத்னவேலுவிற்கு நன்றி கூறி " 'பிளான் செய்த படி விரைவில் இணைந்து படம் செய்வோம்" என குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்